யேர்மனி நாட்டின் Soest நகரில்; தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் தமிழீழக் கொடியினை Castrop Rauxel தமிழாலய நிர்வாகியும், தமிழீழச் செயற்பாட்டாளருமாகிய திரு.சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றினார். பொதுச்சுடரினை இளையோர் ஏற்றினர்.
தமிழீழத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் செல்வன் கஜன் தனது கவிதையூடாக தலைவர் வாழ்த்துப் பாடினார். தொடர்ந்து செல்விகள் கவீனா கஜவதன் , அனுஸ்கா ரவிராஜன் ஆகியோர் தமது வாழ்த்துப்பாவினை கவிதையாக வழங்கினர்.
நிதர்சனதின் முன்னாள் பொறுப்பாளரும், கவிஞருமான துளசிச்செல்வன் அவர்கள் தனது உரையையும், கவிதையையும் கருத்தாழமிக்கதாக நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நேசக்கரம் சாந்தி அவர்கள் துளசிச்செல்வன் அவர்களால் அறிமுகம் செய்யப்படவுள்ள பாடல்தொகுப்பு ஒன்றை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
தமிழீழத் தலைவர் பிறந்தநாளிற்காக உருவாக்கப்பட்டிருந்த இன்சுவை Cake ஐ இளையோர்கள் இணைந்து நின்று வெட்டிப்பகிர்ந்தனர்.
தமிழீழ உறவுகளின் சங்கமமாக நிறைவுற்ற இந்நிகழ்வு , Soest மக்களின் இனிய உபசரிப்போடு இரவு 9.00 மணியளவில் நிறைவுற்றது.
