ஈழத்தமிழர் வரலாறு பேசும் தமிழீழப் பாடல்களை எமது இளைய தலைமுறையினருக்குப் புகட்டும் நோக்கிலும், தமிழிசை அறிவை வளர்க்கும் நோக்குடனும் தாளம் இசைக்குழுவானது தமிழீழ விடுதலைப் பாடற்போட்டியை எதிர்வரும் 29.11.2025 சனிக்கிழமை அன்று யேர்மனியின் Dormund நகரில் நடாத்துகிறது.
நான்கு பிரிவுகளாக நடைபெறும் இப்பாடற்போட்டியின் முடிவுகளும் அன்றைய நாளிலேயே அறிவிக்கப்பட்டு, முதற்பரிசாக தங்கநாணயமும், இரண்டாம் மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். அவ்வாறே வெற்றி,தோல்வி என்பதற்கு அப்பால்; தாயகப் பாடல்களை ஊக்குவிக்கும் முகமாக, போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக தாளம் இசைக்குழு அறியத்தந்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் : 30.10.2025
போட்டியின் விதிகள்:
1. குரல், தமிழ் உச்சரிப்பு, தமிழிசையில் வல்லமை போன்றவற்றில் உங்களது திறமையை அடிப்படையாக வைத்தே புள்ளிகள் வழங்கப்படும். போட்டியாளர் தனது பாடலை ஏதாவது ஓர் காரணத்தின் அடிப்படையில் மீளவும் பாட விரும்பினால், பாடலின் ஒரு பகுதி மட்டும் பாட அனுமதிக்கப்படும். (பல்லவி, ஒரு சரணம் )
2. போட்டியை அண்மித்த காலப்பகுதியில் நீங்கள் தெரிவுசெய்திருக்கும் பாடலை மாற்றவோ அன்றி வேறு பாடலையோ தேர்வு செய்ய இயலாது. அவ்வாறு ஏதேனும் காரணங்களுக்காக நீங்கள் மாற்ற விரும்பினால், தாளம் இசைக்குழு தெரிவு செய்யும் பாடல்களையே பாடவேண்டி ஏற்படும்.
3. போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான கட்டணம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது போன்று, 30 யூரோ ஆகும். இது போட்டியாளருக்கான கட்டணம் மட்டுமே. உங்களுடன் இணைந்து வரும் ஏனையோருக்கான உள்நுழைவுக் கட்டணம் ; ஒரு நபருக்கு 2 யூரோ (இரண்டு) ஆகும்.
4. போட்டி குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படும். போட்டி தொடங்கும் நேரம் ஒரு கிழமைக்கு முன்னதாக அறியத்தரப்படும். எந்தென ஒழுங்கில் போட்டியாளர்கள் மேடைக்கு அழைக்கப்படுவார்கள் என்பது பற்றிய முடிவுகள் நடுவரிடமே இருக்கும்.
5. முதல் மூன்று இடங்களைப் பெறும் பாடகர்கள் தவிர, போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் உண்டு.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. நடுவர்களின் தீர்ப்பிற்கும், தாளம் இசைக்குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது
விண்ணப்பம் தரவிறக்கும் இணைப்பு :
https://thaalam.de/images/home/wettbewerb/Application.pdf
