தமிழீழத் தேசியக்கொடி நாளான கடந்த 21.11.2025 அன்று, Brampton நகர பிதா Patrick Brown தலைமையில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடியின் மேன்மை மற்றும் அதன் சிறப்பியல்புகள் தொடர்பில் எமது அமைப்பானது கனடாவின் முதன்மைப் பிரமுகர்களுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில், அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்திகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
நகரபிதா Patrick Brown அவர்கள் வெளியிட்ட தமிழீழத் தேசியக்கொடிப் பிரகடனம்:

பிரகடனத் தமிழாக்கம்:
ஒவ்வொரு வருடமும் Nov 21 அன்று தமிழீழத்தேசியக் கொடிநாள் உலகெங்கும் ஈழத்தமிழர்களால் நினைவுகொள்ளப்படுகிறது. இது ஈழத்தமிழர் அடையாளத்தையும், 1930 ஆம் ஆண்டு தொடக்கம் நடந்துவருகின்ற தமிழினப்படுகொலையினையும் குறிக்கிறது.தமிழின ப்படுகொலைக்கு நீதிகோரியும்,தமிழின வரலாறையும் இனப்படுகொலையையும் ஆவணப்படுத்தி வருவதோடு ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்காகவும் உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு இயங்கிவருகிறது. தமிழினப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர் அடையாளத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் விதமாக இன்று தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.
– Brampton நகரசபையின் சார்பாக திரு. Patrick Brown
ஒன்ராறியோ மிசிசாகா நகரசபை உறுப்பினர்களின் மற்றும் மிசிசாகா நகரத்தின் சார்பில், 35ஆவது ஆண்டு தமிழீழ தேசியக் கொடி நாள் நினைவுகூரும் இந்நிகழ்விற்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2025 நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தமிழர் தேசியக் கொடி நாள் நிகழ்வு, உங்கள் சமூகத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும், அவ்வாறே எங்களுக்கும் அர்த்தமுள்ளது. மிசிசாகா நகரம் , ஆயிரக்கணக்கான கனடியத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பெருமைக்குரிய இல்லமாக திகழ்கிறது. அவர்கள் நமது நகரத்தின் பல்வகைமை மற்றும் பன்முக பண்பாட்டு மரபை வளப்படுத்தி வருகின்றனர். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பங்கள் இங்கு கட்டியெழுப்பும் நிறைவான வாழ்க்கை என்பது , உங்கள் செழிப்பான பண்பாடு, மற்றும் தன்னாட்சிக்கான உங்கள் தொடர்ந்த முயற்சி போன்ற வலுவான அடித்தளங்களின் மேல் அமைந்துள்ளது.
தமிழீழ தேசியக் கொடி நாளை நினைவு கூரும் இந்த நாள், தமிழ் அடையாளம், பாரம்பரியம், மற்றும் மதிப்புகள் குறித்து ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தும் ஒரு மிக முக்கியமான தருணமாகும். இந்த நாள் மற்றும் கொடி, உங்கள் வரலாறு, பாரம்பரியம் மற்றும் நோக்கங்களை பிரதிபலிக்கும் வலிமையான சின்னங்களாகும். உங்கள் நோக்கங்களை நீங்கள் இங்கிருந்தே தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டிருப்பது மிசிசாகாவுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். நகராட்சி மற்றும் கனடிய அரசியல் துறைகளில் உங்கள் செயலில் ஈடுபாடு, எங்கள் சமூகத்தைச் செழிப்பாக்கியுள்ளது. இந்த முக்கியமான நாளில், எங்கள் நினைப்பில் நீங்கள் உள்ளீர்கள். எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-Carolyn Parrish

Ontario சட்டமன்றத்தின்பேரில், தமிழீழ தேசியக் கொடி நாள் ஏற்றுதல் விழாவை முன்னிட்டு உலகத் தமிழர் உரிமைக்குரல் அமைப்பிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அர்த்தமிக்க நாளை உணர்ந்து கொள்வது எனக்குப் பெரும் பெருமையாகும். இது ஈழத் தமிழர் கனடியர்களுக்கு ஆழமான பண்பாடு, வரலாறு மற்றும் உணர்வு சார்ந்த முதன்மை வாய்ந்தது. தமிழீழத் தேசியக் கொடி என்பது, அடையாளம், அமைதி, ஒற்றுமை மற்றும் தன்னாட்சிக்கான நிலை, போரற்ற தேடலின் வலிமையான சின்னமாக திகழ்கிறது. இந்த ஆண்டு விழா நினைவு நாள், சமுதாயத்தை நினைவுகூறல், உறுதி, ஒற்றுமை ஆகிய உணர்வுகளுடன் ஒன்றிணைக்கிறது. இது கனடா வாழ் தமிழர்கள் நமது மாகாணத்தில் தொடர்ந்து வழங்கி வரும் சிறப்பான பங்களிப்புகளை உரிய முறையில் வெளிப்படுத்துகிறது, ஈழத்தமிழர்கள் எங்கள் பண்பாட்டை வளப்படுத்துகிறார்கள், பல்வகைப்பாட்டை வலுப்படுத்துகிறார்கள், மேலும் இன்னும் ஒன்டாரியோவை கட்டியெழுப்ப உதவுகிறார்கள். இந்த நிகழ்வு அர்த்தமிக்கதும் நினைவில் நிற்கத்தக்கதுமானதாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பண்பாட்டு பாதுகாப்பு, சமூக ஒற்றுமை, மற்றும் ஈழத்தமிழர் கனடியர்களின் தொடர்ந்த முன்னேற்றத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பிற்காக உலகத் தமிழர் உரிமைக்குரல் அமைப்பை நான் பாராட்டுகிறேன் – Logan Kanapathi

அன்புடைய தோழமைகளே, நவம்பர் 21, 2025 பிராம்ப்டனில் உள்ள Ken Whillans Square-இல் நடைபெறும் தமிழீழ தேசியக் கொடி ஏற்றுதல் விழாவில் கலந்து கொள்கிற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது எனக்கு பெருமையாகும். இந்த நாள், தமிழீழத் தமிழர் கனடிய சமூகத்திற்குப் பெரும் அர்த்தமுடையதாகும். இது தன்னாட்சி, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றிற்கான உங்கள் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும், கனேடியத் தமிழர்களின் எழுச்சி, பண்பாட்டுச் செழிப்பு, மற்றும் ஈழத்தமிழர்கள் நமது நகரத்திற்கும் கனடா நாட்டிற்கும் வழங்கி வரும் நீடித்த பங்களிப்புகளையும் கொண்டாடும் வாய்ப்பாக அமைகிறது. பல்வேறு பண்பாடுகள் நமது மிகப் பெரிய வலிமைகளில் ஒன்றாகும். இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகங்களை வடிவமைக்கும் கதைகள், பாரம்பரியங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை கௌரவிப்பதற்காக ஒன்றிணைந்து நிற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன.
இந்த அர்த்தமுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்த “உலகத்தமிழர் உரிமைக்குரல்” அமைப்பிற்கும், இன்று கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நினைவில் நிற்கும், உணர்வூட்டும் தமிழீழ தேசியக் கொடி நாளாக அமைய என் வாழ்த்துகள். வாழ்த்துக்கள்..! – Brad Bradford

அன்பார்ந்த ஈழத் தமிழர் கனடிய சமூக உறுப்பினர்களுக்கு,
தமிழீழ தேசியக் கொடி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தப்படுகிறேன். இருப்பினும், இந்த முக்கியமான நாளை நினைவுகூரும் உங்களுடன் நான் ஒற்றுமையாக நிற்கிறேன். இந்த நாள் பிரதிபலிக்கும் துணிச்சல், ஒற்றுமை மற்றும் பண்பாட்டு பெருமை போன்ற மதிப்புகள் மிகுந்த அர்த்தமுள்ளதாகும். உங்கள் பாரம்பரியத்தை மரியாதையுடன் காக்கவும் மேம்படுத்தவும் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
இந்த அர்த்தமுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள ஈழத் தமிழர் கனடிய சமூகத்திற்கும் “உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பிற்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழீழ தேசியக் கொடி என்பது துணிவின், பண்பாட்டு பெருமையின் மற்றும் நிலையான அமைதி மற்றும் தன்னாட்சிக்கான தேடலின் வலிமையான சின்னமாகும். இந்த நாள், கனடாவின் தமிழர்களின் வலிமையும் ஒற்றுமையும் குறித்து நினைவூட்டும் முக்கியமான நாளாக விளங்குகிறது; மேலும் அவர்கள் நம் நாட்டின் சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அளிக்கும் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
தமிழீழ தேசியக் கொடி நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் செய்தியாக இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளவும். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாகவும் ஊக்கமூட்டுவதாகவும் அமைய என் வாழ்த்துக்கள். வருங்காலங்களில் தமிழர் கனடிய சமூகத்துடன் கூடி பணியாற்றவும் ஆதரவு தரவும் நான் ஆவலாக எதிர்நோக்குகிறேன். – Kelly DeRidder
