தமிழீழப் பாடற்போட்டி – 2025

தாளம் இசைக்குழு நடாத்திய தமிழீழப் பாடற்போட்டி – 2025, கடந்த 29.11.2025 அன்று Dortmund நகரில் நடைபெற்றது. முதன்மை நடுவராக தமிழீழத்தின் விடுதலைப்பாடகியும் தமிழிசை ஆசிரியருமான  திருமதி. மணிமொழி கிருபாகரன் அவர்களும், துணை நடுவராக தமிழிசை ஆசிரியர் திருமதி ஜெகதா பத்மகாந்தன் அவர்களும் கடமையாற்றினர்.

நிகழ்வில் விழாச்சுடரை,  திருமதி அமுதா புலேந்திரன், திரு.வலன்ரைன், திரு.பாபு சிவநாதன், திருமதி பென்சியா அலன், திரு. பானுஜன் ஆகியோர் ஏற்றினர். தமிழீழத் தேசியக்கொடியை திரு.றோய் அவர்கள் ஏற்ற, ஈகைச்சுடரை மாவீரரின் சகோதரனான திரு.கேமச்சந்திரன் அவர்கள் ஏற்றினார்.  அகவணக்கம் மற்றும் மலர்வணக்கத்துடன் நிகழ்வு தொடங்கியது.

பங்குபற்றிய அனைவரும் மிகச் சிறப்பாகத் தமது திறமையை வெளிப்படுத்தினர். தமிழீழத்தின் உணர்வு பொங்கும் பாடல்களால் அரங்கம் நிறைந்திருந்தது. அனைவரும் சிறப்பாகப் பாடியிருப்பினும், தகுதி நிலை அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்யவேண்டிய அவசியம் இருந்ததன் அடிப்படையில் மூன்று நிலைகளுக்குரிய  12 பாடகர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர்.

முதல்நிலையை அடைந்து  தங்கம் வென்ற போட்டியாளர்கள்: 
கீழ்நிலை  (6-11) – சிறீஜன் நிரஞ்சன்
நடுநிலை (11 – 17) செல்வி யொகேனா கீதன்
உயர்நிலை (18-25) செல்வி டிவைனா அன்ரன்
மேல்நிலை (26 – 45)  திரு.யூட் பிராங்க்ளின்

இரண்டாமிடம் பெற்றவர்கள் :
கீழ்நிலை (06-11)  – செல்வி ஹரிணி பிரதீப்
நடுநிலை (11-17) செல்வன் ஸ்ரெபான் Aindic
உயர்நிலை (18 -25) செல்வி சந்தியா கேமச்சந்திரன்
மேல்நிலை (26-45)  திரு.விக்னேஷ் ரஞ்சித்

மூன்றாமிடம் பெற்றவர்கள் :
கீழ்நிலை (06-11) – செல்வி மௌலிஷா பிரஸ்தாபன்
நடுநிலை (11 -17) செல்வி அபிகாயில் சசிரதன்
உயர்நிலை (18-25) செல்வி மதுஷா ரஞ்சித்
மேல்நிலை (26-45) திரு.நிரஞ்சன் காஷ்மீர்

நிகழ்வில் தாளம் இசைக்குழு கலைஞர்களுக்கான மதிப்பளிப்பினை தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் திரு.வலன்ரைன் வழங்கிச் சிறப்பித்தார். அனுசரணையாளர்களுக்கான மதிப்பளிப்பு மற்றும்  நாட்டிய கலாஜோதி செல்வன் நிமலன் சத்யகுமார் அவர்களுக்கான மதிப்பளிப்பை செல்வி கிறிஸ்ரினா இராசையா அவர்களும், நடுவர்களுக்கான மதிப்பளிப்பினை கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் ஆசிரியர் திருமதி ரஜினி சுந்தரலிங்கம் அவர்களும் வழங்கிச் சிறப்பித்தனர். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்குமான மதிப்பளிப்பினை திருமதி றெனோ சாந்தன் அவர்கள் வழங்கினார்.

“தமிழைப் பேசுவதும் பயில்வதும் தமிழர்களாகிய எமது முதற்கடமையாக இருக்கவேண்டும்” என துணை நடுவராகிய ஜெகதா பத்மகாந்தன் அவர்கள் தனது உரையில்   குறிப்பிட்டார்.  தமிழீழப் பாடல்களின் வரலாறையும், அவற்றின் தொன்மை மற்றும் உருவாக்கப்பட்ட அவசியம் பற்றியும் முதன்மை நடுவராகிய  மணிமொழி கிருபாகரன் அவர்கள் குறிப்பிட்டார்.

திரு.சுதன் டேவிட் அவர்களும், திருமதி பென்சியா அலன் அவர்களும் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர். நிகழ்வுக்கான மேடைவடிவமைப்பை செல்வி கிறிஸ்ரினா இராசையா அவர்கள் சிறப்பாக ஒழுங்குசெய்திருந்தார்.

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலோடு நிகழ்வு நிறைவுபெற்றது,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

share this blog -

Facebook
Twitter / X
WhatsApp
LinkedIn

share this blog -

error: Content is protected !!
Scroll to Top