ஈழத் தமிழரின் தாய்நிலமான தமிழீழத்தின் பகுதிகளில் புதைந்துகிடக்கின்ற தொன்மப் பொருட்களை அகழ்ந்தெடுத்து ஆய்வு செய்வதன் மூலம், தமிழரின் தொன்மையான வரலாறினை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசு தற்போது நம்மிடம் இல்லை. ஆதலால்; தமிழரது தொன்மங்களைப் பறைசாற்றும் இடங்கள், கோயில்கள், நிலங்கள் ஆகியவற்றையாவது , சிங்கள அரசிடமிருந்து பாதுகாப்பதுடன், அவை வல்வளைப்புச் செய்யப்படும் வேளைகளில் அதனை வெளியுலகிற்கு எடுத்துச் செல்வதும் தற்போதைய அவசிய தேவையாக உள்ளது.
சட்டமூலமாக, கவனயீர்ப்பு மூலமாக, ஆவணப்படுத்தல்மூலமாக எம்நிலத்தின் தொன்மையைத் தொடர்ந்து அடையாளப்படுத்தியவண்ணமே இருப்போம்.
தமிழர் தாயகப்பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் வாழுகின்ற தமிழர்களது முயற்சியில் இயங்கவிருக்கும் இச்செயற்பாட்டில் தங்களையும் இணைத்துக்கொண்டு, மண்ணையும் வரலாறையும் காக்க முன்வருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.