Dusseldorf – Wiesbaden
02.09.2023 – 24.09.2023
உலகத்தமிழ் உறவுகளே.
இந்நடைப்பயணத்தைப் பெண்கள் நிகழ்த்துவதற்கான அடிப்படைக் காரணங்களில் முதன்மையானது தியாகதீபம் திலீபன் அவர்கள் பெண்விடுதலை மீது கொண்டிருந்த நேர்த்தியான பார்வையை மீள நினைவுபடுத்துதலேயாகும். அடக்குமுறைகளை அறவே ஒழித்த தமிழீழப்பெண்களின் உயர்வுக்காக உழைத்தவர்களில் தியாகதீபம் திலீபன் முதன்மையானவர்.
*தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திவருகின்ற தொடர் இனஅழிப்பிற்கான தண்டனைக்கு சிறிலங்கா உட்படுத்தப்படுவதோடு, ஈழத்தமிழர்கள் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும்,
* நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் நேர்மையான போராட்டத்திற்கு யேர்மனிய அரசு ஆதரவு வழங்கவேண்டும்.
* தமிழீழத்திலும் தமிழர்கடலிலும் அமைதியை நிலைநாட்டவும், தமிழீழ அரசின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றிய; யேர்மனியின் முன்னாள் நடுவண் பொருளாதார மற்றும் மக்கள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அமைச்சராகவிருந்த மதிப்பிற்குரிய Heidemarie Wieczorek -Zeul (SPD கட்சி)அவர்கள் ஆரம்பித்த பணிகளை மீளவும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
* சிங்கள அரசால் வல்வளைப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழிகள் மீதான விசாரணைக்கு சிறிலங்கா அரசை உட்படுத்தவேண்டும்.
* சிங்கள அரசாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் பற்றி அனைத்துலகம் கவனம் செலுத்தவேண்டும்
* ஈழத்தமிழரின் தொன்ம வழிபாட்டிடங்கள், வரலாறுத் தொடர்புள்ள இடங்களை வல்வளைப்புச் செய்யும் சிங்களத் தொல்லியல்துறையின் அட்டூழியங்களை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
* திருகோணமலை ஈழத்தமிழர் தலைநகரம், அங்கே அந்நியர்களின் ஆக்கிரமிப்பை ஈழத்தமிழராக எதிர்க்கிறோம் என்பதை அனைத்துலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும்.
* சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடுகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஏனைய தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்துகின்ற அடக்குமுறை கைதுநடவடிக்கைகள் நிறுத்தப்பட ஐரோப்பிய ஒன்றியம் வழிவகை செய்யவேண்டும்.
* பல வருடங்களாக சிங்களஅரச பயங்கரவாதத்தால் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை விடுவிக்க யேர்மனிய அரசை அழுத்தம் கொடுக்கவேண்டும்.
* உலகவங்கியின் கடனுதவிகளைக்கொண்டு சிறிலங்கா அரசானது தமிழர்நிலங்களை அழித்தொழித்தும், சிறிலங்கா இராணுவத்தை தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தும் செயல்களுக்குமே முன்னுரிமை வழங்குகிறது என்பதால் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படவேண்டும்
* தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களை முகாம்களில் அடைத்துவைத்து இந்திய அரசு கொடுமைப்படுத்துவதை உலகநாடுகள் கவனத்திற்கொள்ளவேண்டும்.
* இந்தோனேசிய சிறைகளில் வாடும் ஈழத்தமிழருக்கு ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் வழங்க வேண்டும்.
உட்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு “அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம்” தொடங்கவுள்ளது.
அடக்குமுறைகளுக்கெதிராகக் குரலெழுப்புவதும், எம்மீதான இனஅழிப்பை உலகிற்கு அடையாளப்படுத்துவதும் ஈழத்தமிழர்களாகிய எமது கடமை என்பதை நாமனைவரும் உணர்வோம்.
ஆதலால்; அமைதிக்கான பெண்கள்” நடைப்பயணத்தில் பங்குகொள்ள உங்களை அழைக்கிறோம்.
பகுதிநாட்களாகவோ, அன்றி தொடர்ச்சியாகவோ இப்பயணத்தில் பங்கெடுக்க விரும்புவோர் எம்மோடு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
தொடர்பு:
#யேர்மனி : +49 1521 6969449 / +49 1573 0089464
#கனடா : 001 437488 6406
#பிரித்தானியா : +44 7958 169150
இறுதிநாளான 24.09.2023 அன்று Wiesbaden நகரில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவெழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.
@IMRV-Bremen & @Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல்