பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நூல்வெளியீடு!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவேந்தலும், “பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” என்ற நூல்வெளியீடும் 02.11.2024 அன்று யேர்மனியின் Castrop – Rauxel நகரத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரை; செல்வன் மலரவன், செல்வி எழினி, செல்வி எலேனா, செல்வி ரோஜனா, செல்வி திகழ்கா ஆகியோர் ஏற்ற, ஈகைச்சுடரை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது மகள் திருமதி அலைமகள் நிதர்சன் அவர்கள் ஏற்றினார். பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அவரது மகன் ஒளிவேந்தன் மலர்மாலை அணிவித்தார்.

தொடக்கவுரையை தமிழ்க்கல்வி கலை பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் திரு.வலன்ரைன் நிகழ்த்தினார். தமிழீழ எழுச்சிப்பாடல்களை திரு.பிரபா, செல்வி.தட்சா, செல்வி யொகேனா, செல்வி சந்தியா, செல்வி எலேனா, செல்வி ரோஜனா ஆகியோர் பாடி நிகழ்வைச்சிறப்பித்தனர்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது போராட்டப்பணிகள் பற்றி; செல்வன் கஜன் மற்றும் செல்வன் சாருஜன் ஆகியோர் உரைவடிவமாகத் தர, செல்வி சதுர்யா அவர்கள் கவிதைவடிவத்தில் வழங்கினார். செல்வன் கஜன் அவர்களது கவிதையில் எமது இனம் வீறுகொண்டு போராடும் என்ற உள்ளக்கிடக்கை நம்பிக்கையுடன் வெளிப்பட்டது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது பணிகள் பற்றி வாழிட மொழியான யேர்மனிய மொழியில் செல்வி மாதினி சுந்தரலிங்கம் அவர்கள் எடுத்துரைத்தார்.

“பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்” நூலை, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது மகள் அலைமகள் மற்றும் மகன் ஒளிவேந்தன் ஆகியோர் வெளியிட, சிறப்புப்பிரதிகளை;

திரு.நாதன்தம்பி (தவிபுகளுக்கு நிதி திரட்டியது எனது உரிமை என வழக்காடுபவர்)

செல்வி தட்சா (Genicide Chronicle – தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டினை நான்கு மொழிகளில் தொகுத்த நூலாசிரியர்)

திரு.சுந்தரலிங்கம் (தமிழீழச் செயற்பாட்டாளர் மற்றும் Castrop Rauxel தமிழாலய நிர்வாகி)

திரு.பாபு (முன்னாள் மாநிலப்பொறுப்பாளர், தமிழீழச் செயற்பாட்டாளர்)

திரு.முகுந்தன் (தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் மற்றும் நாம் தமிழர் யேர்மனியக்கிளையின் பொறுப்பாளர்)

திரு.வலன்ரைன் (தமிழ்க்கல்வி கலை பண்பாட்டு நடுவப் பொறுப்பாளர், தமிழீழச் செயற்பாட்டாளர்)

திரு.துளசிச்செல்வன் (முன்னைநாள் நிதர்சனம் பொறுப்பாளர்)

திரு.கேமச்சந்திரன் (Warendorf தமிழாலய நிர்வாகி)

திரு.அன்ரன் றொபேட்

திரு.திருமதி கனகசபை (தமிழீழச் செயற்பாட்டாளர் மற்றும் தமிழாசிரியர் – சுவிட்சர்லாந்து)

திரு.கோணேஸ் (இத்தாலி நாட்டின் முன்னைநாள் தமிழீழச் செயற்பாட்டாளர்)

ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பிரதிகளை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களது மகன் ஒளிவேந்தன் வழங்கிச் சிறப்பித்தார்.

“தடியூண்டி வந்த சமாதானத் தூதுவன்” என்ற தலைப்பில் மிகவும் கருத்தாழம் மிக்க வில்லுப்பாட்டினை கஜன் அருந்தவராஜா, அக்கா ஜெகதீஸ், ஹம்சிகா அண்ணாதுரை, சாருஜன் சிறிவரன், சதுர்யா சிறிவரன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் சிறப்புரையை நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த துளசிச்செல்வன் வழங்க, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான தமது அனுபவப்பகிர்வினை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திருமதி கனகசபை அவர்கள் வழங்கினார்.

நிகழ்வாக மட்டுமன்றி, தாயக உறவுகள் சங்கமித்து தமது அன்பினைப் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரோடு பகிர்ந்து மகிழ்ந்த ஓர் நெகிழ்ச்சியான நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமையப்பெற்றது.

நிகழ்வை அறிவிப்பாளர் சுதன் டேவிட் அழகுறத் தொகுத்து வழங்கினார்..!

– உலகத்தமிழர் உரிமைக்குரல்

 

View All Photos

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

share this blog -

Facebook
Twitter / X
WhatsApp
LinkedIn

share this blog -

error: Content is protected !!
Scroll to Top